\
பையா
பையாகூகுள்

ரீ ரிலிஸ் ஆகிறது கார்த்தி, தமன்னா நடிப்பில் ஹிட் அடித்த ’பையா’

கார்த்தி, தமன்னா நடிப்பில் 2010-ல் வெளியான பையா திரைப்படம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 11ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
Published on

கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான பையா திரைப்படம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 11ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலிஸ் செய்யப்பட்டு இன்றைய தலைமுறையினரையும் கவர்ந்து வருகிறது.

சமீப காலமாக இத்தகைய படங்களின் எண்ணிக்கையும் அதற்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்த பையா திரைப்படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ஏப்ரல் 11ம் தேதி ரீ ரிலிஸ் செய்யப்பட இருக்கிறது. பையா படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் 6 பாடல்களும் ஹிட் அடித்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com