\
’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் என்ன உண்மை சம்பவம்?

’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் என்ன உண்மை சம்பவம்?

’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் என்ன உண்மை சம்பவம்?
Published on

கார்த்தி, ரகுல் பிரீத் சிங், அபிமன்யூ சிங், போஸ் வெங்கட் உட்பட பலர் நடிக்கும் படம், ’தீரன் அதிகாரம் ஒன்று’. ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ’சதுரங்கவேட்டை’  வினோத் இயக்குகிறார். ஆக்‌ஷன் திரில்லர் கதையை கொண்ட படமான இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். 

படம் பற்றி இயக்குனர் வினோத்திடம் கேட்ட போது ’உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்ட படம் இது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய சம்பவங்களை வைத்து கதையை உருவாக்கி இருக்கிறேன். அது என்ன உண்மை சம்பவம் என்பதை விரைவில் சொல்கிறேன். நான் இயக்கிய ’சதுரங்கவேட்டை’ படத்தில் வசனத்துக்கு முக்கியத்துவம் இருக்கும். இதில் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். யதார்த்தமான போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்திருக்கிறார். ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே பாக்கி இருக்கிறது’ என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com