பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி காலமானார்

கன்னட நடிகை லீலாவதி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
பிரபல நடிகை லீலாவதி
பிரபல நடிகை லீலாவதிfile image

பிரபல கன்னட திரைப்பட நடிகை லீலாவதி நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 85. உடல்நலக் குறைவு காரணமாக  வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று மதியம் திடீரென அவருக்கு ரத்த அழுத்த பிரச்னை ஏற்பட்டதால் உடனடியாக நெலமங்கலத்தில்  உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி லீலாவதி காலமானார். 

நடிகை லீலாவதி
நடிகை லீலாவதி

கர்நாடகாவைச் சேர்ந்த லீலாவதி, தட்சிண கன்னட மாவட்டம், பெல்தங்கடியில் பிறந்தார். தன்னுடைய 16 வயதிலிருந்தே  சினிமாவில் நடிக்கத் தொடங்கி 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருந்துள்ளார். தமிழ், கன்னடா, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிரபல நடிகை லீலாவதி
70 வயது மூதாட்டியை கொன்றுவிட்டு 5 சவரன் தங்க நகையை திருடிய தம்பதி.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

தமிழில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்படப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் லீலாவதி. தமிழ், கன்னடம், தெலுங்கு உள்படப் பல மொழி படங்களில் நடித்து வந்தார். தமிழில் பட்டினத்தார், வளர்பிறை, அவள் ஒரு தொடர்கதை, அவர்கள்,  நான் அவன் இல்லை (1974-ல் வெளியான படம்) உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய மறைந்த நடிகர் ராஜ்குமாருடனும், தெலுங்கு சினிமாவில் நடிகர் என்.டி.ஆருடனும் நடித்துள்ளார். கன்னட சினிமாவில் மட்டும் 400 படங்கள் வரை நடித்துள்ளார். இவர் தனது மகனும், நடிகருமான வினோத்ராஜ்யுடன் வசித்து வந்தார்.

பிரபல நடிகை லீலாவதி
தூத்துக்குடி | 55,000 டன் உர மூட்டைகளுடன் தரைதட்டி நின்ற சரக்கு கப்பல்; முடங்கிப் போன இறக்குமதி பணி!

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக அவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று அவருக்கு திடீரென்று உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். 

அஞ்சலி செலுத்திய கர்நாடக முதல்வர் சித்தராமையா
அஞ்சலி செலுத்திய கர்நாடக முதல்வர் சித்தராமையா

நடிகை லீலாவதியின் மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்பட திரையுலக கலைஞர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கன்னட மொழி திரைத்துறையினர் மற்றும் தென்னிந்தியத் திரைப்படத்  துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கன்னட முதல்வர் சித்தராமையாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரபல நடிகை லீலாவதி
வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசுத் தடை! விலை உயர்வைத் தடுக்க நடவடிக்கை!!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com