\
கர்ணன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு!

கர்ணன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு!

கர்ணன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு!
Published on

தனுஷின் ‘கர்ணன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தனுஷின் 41-வது படமான 'கர்ணன்' திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். தாணு தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளர்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் ஏப்ரலில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், நாளை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com