ஐ.பி.எல்லில் என் மகனுக்கு இடம் கிடைக்குமா? கரீனா கபூர்
தன் மகன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படத்தை பகிர்ந்து ஐ.பி.எல்லில் மகனுக்கு இடம் கிடைக்குமா? எனக் கேட்டுள்ளார் கரீனா கபூர்.
பாலிவுட் திரையுலகின் முக்கிய காதல் திருமண ஜோடிகளில் ஒன்று சைஃப் அலிகான், கரீனா கபூர் ஜோடி. அவர்களுக்கு மூன்றரை வயதில் தைமுர் அலிகான் என்ற ஒரு மகன் இருக்கிறார்.
சைஃப் அலி கானின் தாயார் ஷர்மிளா தாகூருடன் நேரம் செலவழிக்கவும், வேலை நிமித்தாகவும் கரீனா கபூர் குடும்பம் தற்போது பட்டோடியில் உள்ளது.
இந்நிலையில் கரீனா கபூர் தனது மகன் தைமூர் அலி கானின் புதிய படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தில் தைமூர் மற்ற குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்.
ஒரு சில சிறுவர்கள் விக்கெட் பின்னால் நின்று, தங்கள் முறைக்கு காத்திருக்கிறார்கள். கரீனா இந்த படத்தை பதிவிட்டு, “ஐபிஎல்லில் ஏதாவது இடம் இருக்கிறதா? நானும் விளையாட முடியும்” எனக் கேட்டுள்ளார்.
தனது மகன் தைமூர் ஒரு கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்று விரும்புவதாக கரீனா கபூர் பல நேர்காணல்களில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.