கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: ஏராளமான பொருட்கள் சேதம்

கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: ஏராளமான பொருட்கள் சேதம்

கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: ஏராளமான பொருட்கள் சேதம்
Published on

பிரபல இந்தி பட இயக்குனர் கரண் ஜோஹருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் சேதமடைந்துள்ளன.

இந்தியில், ‘குச் குச் ஹோதா ஹே;, கபி குஷி கபி கம், கபி அல்விதா நா கேஹ்னா, மை நேம் இஸ் கான், ஏ தில் ஹே முஷ்கில், லஸ்ட் ஸ்டோரிஸ் உட்பட பல படங்களை இயக்கியவர் கரண் ஜோஹர். இவர் பிரபல தயாரிப்பாளரும் கூட. ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். 

பிரபல தயாரிப்பாளர் யஷ் ஜோஹரின் மகனான இவர்களுக்கு சொந்தமான தர்மா புரொடக்‌ஷன்ஸ் அலுவலகம் மும்பை, கிழக்கு கோரேகான் பகுதியில் உள்ளது. கேமா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் உள்ள இதன் குடோனில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி போலீசுக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 12 தீயணைப்பு வண்டிகள் விரைந்து தீயை போராடி அணைத்தன.

இதில் உயிர்சேதம் ஏதுமில்லை என்று கூறப்படுகிறது. முதலில் முதல் மாடியில் பற்றிய தீ, பின்னர் மற்ற இடங்களுக்கும் பரவியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. 

இந்த விபத்தால் அங்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமானப் படப்பிடிப்பு சாதனங்கள், காஷ்ட்யூம்கள், புத்தகங்கள் தீயில் கருகிய தாகத் தெரிகிறது. சேத விவரங்கள் உடனடியாகத் தெரியாகவில்லை. அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com