\
ரூ100 கோடி வசூலித்தது ‘காப்பான்’ - லைகா நிறுவனம் அறிவிப்பு

ரூ100 கோடி வசூலித்தது ‘காப்பான்’ - லைகா நிறுவனம் அறிவிப்பு

ரூ100 கோடி வசூலித்தது ‘காப்பான்’ - லைகா நிறுவனம் அறிவிப்பு
Published on

சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் ரூ100 கோடி வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி காப்பான் படம் வெளியானது. இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் விவசாயிகள் பிரச்னை, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவை பேசப்பட்டன. இந்தப் படத்தை பாராட்டி விவசாய சங்கங்கள் சிலவும் சூர்யாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தன.

இருப்பினும், இந்த படம் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்றதா என்ற கேள்வியும் இருந்து வந்தது. இந்நிலையில், காப்பான் திரைப்படம் ரூ100 கோடி வசூலித்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.
 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com