ஆங்கிலத்தில் காந்தாரா சாப்டர் 1 .. வெளியான அறிவிப்பு | Kantara Chapter 1 | Rishab Shetty
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த படம் `காந்தாரா சாப்டர் 1'. அக்டோபர் 2ம் தேதி வெளியான இப்படம் 2 வாரங்களில் 717.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் உருவாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. தமிழில் ரிஷப் ஷெட்டிக்கு நடிகர் மணிகண்டன் டப்பிங் குரல் கொடுத்திருந்தார்.
இப்போது இப்படத்தின் ஆங்கில பாதிப்பு வெளியாகிறது என தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே அறிவித்துள்ளது. இதற்கு முன்பு வெளியான காந்தாரா ஓடிடியில் வெளியான போது ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டு வெளியானது. தற்போது `காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு காரணமாக, ஆங்கிலத்திலும், ஸ்பானிஷிலும் டப் செய்து வெளியிட திட்டமிடப்பட்டது.
அதில் இப்போது ஆங்கில வெர்ஷன் தயார் செய்யப்பட்டு அக்டோபர் 31ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்திய மொழிகளில் `காந்தாரா சாப்டர் 1' படத்தின் நீளம் 2 மணிநேரம் 48 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக இருக்கிறது. ஆங்கில மொழியில் படத்தின் நீளத்தை 2 மணிநேரம் 14 நிமிடங்களாக குறைத்து வெளியிடுகிறார்கள். ஏற்கெனவே வசூலில் சாதனைகள் படைத்து வரும் படம், இனி ஆங்கிலத்தில் எப்படியான வரவேற்பை பெரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.