Kantara chapter 1 joined 100 crore club in two days
Rishab Shettyx page

இரண்டே நாளில் 100+ கோடி.. வசூலில் கலக்கும் காந்தாரா சாப்டர் 1 | Kantara: Chapter 1 | Rishab Shetty

துவக்க நாளில் இந்திய அளவில் அதிக வசூல் செய்த தென் இந்திய படங்களின் பட்டியலிலும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது காந்தாரா.
Published on

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான படம் `காந்தாரா எ லெஜண்ட் சாப்டர் 1'. 2022இல் வெளியான ‘காந்தாரா’ படத்தின் முன் கதையாக இப்படம் உருவாகியிருந்தது. ஜெயராம், ருக்மிணி, குல்ஷன் தேவய்யா, ப்ரமோத் ஷெட்டி எனப் பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் வசூலிலும் பெரிய சாதனைகளைச் செய்து வருகிறது.

முதல் நாள் இப்படத்தின் வசூல் இந்திய அளவில் 74.25 கோடி (Gross) என சொல்லப்படுகிறது. இரண்டாவது நாள் 55.25 கோடி வசூல் எனவும் சொல்லப்படுகிறது. எனவே இரண்டே நாட்களில் இப்படத்தின் வசூல் 129.5 கோடியாக உள்ளது.

Kantara chapter 1 joined 100 crore club in two days
மெய்சிலிர்க்கும் காட்சிகள்.. கொண்டாடும் ரசிகர்கள்.. எப்படியிருக்கிறது காந்தாரா சாப்டர் 1

மேலும், துவக்க நாளில் இந்திய அளவில் அதிக வசூல் செய்த தென் இந்திய படங்களின் பட்டியலிலும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது காந்தாரா. இந்தப் பட்டியலில் 14வது இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது `புஷ்பா 2 தி ரூல்', 209.20 கோடி வசூல் செய்துள்ளது.

Kantara chapter 1 joined 100 crore club in two days
காந்தாரா 2எக்ஸ் தளம்

தொடர்ந்து படத்திற்கு பெரிய வரவேற்பு இருப்பதால் வசூலில் இன்னும் பல சாதனைகளை `காந்தாரா எ லெஜண்ட் சாப்டர் 1' செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் இறுதியில் `காந்தாரா எ லெஜண்ட் சாப்டர் 2' படமும் வரும் என இப்படத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த பாகத்திற்கும் இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Kantara chapter 1 joined 100 crore club in two days
`காந்தாரா' படம் கெளரவிப்பு.. அஞ்சல் அட்டைகள், தபால் தலைகள் வெளியீடு! | Kantara

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com