கண்ணதாசன், எம்எஸ்வி தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல: இந்தியாவிற்கே பொக்கிஷங்கள்: கமல்ஹாசன்

கண்ணதாசன், எம்எஸ்வி தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல: இந்தியாவிற்கே பொக்கிஷங்கள்: கமல்ஹாசன்
கண்ணதாசன், எம்எஸ்வி தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல: இந்தியாவிற்கே பொக்கிஷங்கள்: கமல்ஹாசன்

மறைந்த கவிஞர் கண்ணதாசன் மற்றும் இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

 மறைந்த பாடலாசிரியர் கண்ணதாசன் இறப்பதற்குமுன் கடைசியாக பணியாற்றியது கமல்ஹாசன் நடிப்பில் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான ‘மூன்றாம் பிறை’ படத்தில்தான். இதில், இடம்பெற்ற ’கண்ணே கலைமானே’ தமிழ் சினிமாவின் கடைசி ரசிகர் உள்ளவரையும் போற்றப்படும்: போற்றிக்கொண்டே இருக்கும்படியான பாடல். ’மூன்றாம் பிறை’ படம் வெற்றி பெற்றதோடு கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், பாலுமகேந்திராவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் கிடைத்தது. அதற்கு, கண்ணதாசனின் பாடலும் ஒரு காரணம். அதேபோல, இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன் கமல்ஹாசனின்  நடிப்பில் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான ‘காதலா காதலா’ படத்தில் நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தினார்.

கலைத்துறையின் இந்த இருபெரும்  இலக்கிய, இசை ஆளுமைகளின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கண்ணதாசனின் 95 வது பிறந்தநாளையொட்டியும்,  எம்.எஸ் விஸ்வநாதனின் 93 வது பிறந்தநாளையொட்டியும் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இசையோடு தமிழையும் கலந்து இலவசமாய் தமிழ்க் கல்வி தந்த திரு.கண்ணதாசன்,  திரு.எம்.எஸ். விஸ்வநாதன் அய்யாக்களுக்கு ஒரே நாள் பிறந்த தினமாய் அமைந்தது இன்னொரு அற்புதப் பொருத்தம் . இருவரும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல.. இந்தியாவின் பொக்கிஷங்கள். போற்றி..போற்றி” என்று பெருமையுடன் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com