kannada and tamil serial actress nandini dies
நந்தினி சி.எம்.எக்ஸ் தளம்

உயிரை மாய்த்துக்கொண்ட நடிகை.. பின்னணி காரணம் என்ன? பேசுபொருளாகும் அவரது கடைசி சீன்!

கன்னட மற்றும் தமிழ் தொலைக்காட்சி நடிகை சி.எம்.நந்தினி, பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
Published on
Summary

கன்னட மற்றும் தமிழ் தொலைக்காட்சி நடிகை சி.எம்.நந்தினி, பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வந்தவர் நடிகை சி.எம். நந்தினி. இவர், கன்னடம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். ஜீவா ஹூவாகிடே, சங்கர்ஷா, மதுமகளு , நீனாடே நா உள்ளிட்ட பல பிரபலமான கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். அதன்மூலம் தனது நடிப்புத் திறமையையும் நிரூபித்தார். ’கௌரி’ என்ற தமிழ்த் தொலைக்காட்சி தொடரில்கூட அவர் கனகா மற்றும் துர்கா என சவாலான இரட்டை வேடங்களில் நடித்து வந்தார். அவருடைய இந்த நடிப்பு, பலராலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில், நடிகை நந்தினி பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில், இன்று தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அவருடைய மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், அவரது மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

kannada and tamil serial actress nandini dies
நந்தினி சி.எம்.x page

நந்தினியின் மரணம் தொடர்பாக இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் தெரியாத நிலையில், அதுகுறித்த விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை. அதேநேரத்தில், அவரது பெற்றோருக்கு அனுப்பப்பட்ட மரணக் குறிப்பில், தனது விருப்பத்திற்கு மாறாக, பெற்றோர் திருமணம் செய்துகொள்ள தன்னை வற்புறுத்தியதாகவும், அதற்கு மனரீதியாக, தான் தயாராக இல்லை என்றும் இந்தப் பிரச்னைகள் காரணமாக, தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழ் சீரியலான ’கௌரி’யில், அவர் சமீபத்தில் விஷம் அருந்துவது தொடர்பான காட்சியில் நடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஆன்லைனில் விவாதத்தைத் தூண்டியுள்ளது. எனினும், நந்தினியின் திடீர் மறைவு கன்னடம் மற்றும் தமிழ் தொலைக்காட்சித் துறைகளைச் சேர்ந்த அவரது சகாக்கள் மற்றும் ரசிகர்களைக் கண்கலங்க வைத்துள்ளது.

kannada and tamil serial actress nandini dies
மகளை கொன்றுவிட்டு டி.வி நடிகை தற்கொலை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com