\
கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை - 21 வயதில் உயிரிழந்த இளம் கன்னட நடிகை!

கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை - 21 வயதில் உயிரிழந்த இளம் கன்னட நடிகை!

கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை - 21 வயதில் உயிரிழந்த இளம் கன்னட நடிகை!
Published on

கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சையால் கன்னட 21 வயதான சின்னத்திரை நடிகை சேத்தனா உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'கீதா', 'தோரிசாணி', 'ஒலவினா நில்தானா' ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும், 'ஹவயாமி' எனும் கன்னட திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். உடல் எடை மற்றும் கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் இவர் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காலை கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது நுரையீரலில் நீர் தேங்கத் தொடங்கியதால், நடிகையின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பின் அவர் உயிரிழந்துள்ளார்.

பெற்றோருக்கு தெரியாமல் சேத்தனா இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் அலட்சியமே தங்கள் மகளின் உயிரிழப்புக்கு காரணம் என நடிகையின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சேத்தனாவின் உடல் கூடாராய்வுக்காக ராமையா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடனடியாக உடல் எடையை குறைக்க வேண்டும், உடலின் குறிப்பிட்ட பாகத்தின் எடையை குறைக்க வேண்டும் என இது போன்ற அறுவை சிகிச்சைகளை பலர் மேற்கொள்வது அதிகரித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com