\
கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!

கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!

கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
Published on

கார் விபத்தில் பிரபல கன்னட டிவி நடிகை ஷோபா, பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரபல கன்னட டிவி நடிகை ஷோபா. ’மகளு ஜானகி’  என்ற தொடர் மூலம் பிரபலமான இவர், பல்வேறு டி.வி தொடர்களிலும் சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பனசங்கரி கோயிலுக்கு நேற்று முன்தினம் காரில் சென்று கொண்டிருந்தார். காரில், டிரைவருடன் சேர்த்து 8 பேர் இருந்தனர். 

சித்ரதுர்கா பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக, லாரியின் மீது மோதியது. இதில் காரில் இருந்த ஷோபா உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந் தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்தச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிவி நடிகை ஷோபாவின் மறைவுக்கு கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com