நடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் மரணம்

நடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் மரணம்

நடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் மரணம்
Published on

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 66.

 பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ். ‘ரிபல் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்டு வந்த இவர் தமிழ், கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் 208 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ‘அம்பி நிமக்கு வயசாகிதே’ என்ற படத்தில் நடித்திருந்தார். இது தமிழில் வெளியான ‘பவர்பாண்டி’ படத்தின் ரீமேக். நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான இவர், ஆரம்ப காலகட்டத்தில் ரஜினியுடன், பிரியா, தாய் மீது சத்தியம் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சராகவும் இருந்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த அம்ரீஷ், சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிங்கப் பூருக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். 

பெங்களூருவில் உள்ள வீட்டில் இருந்த நடிகர் அம்பரீசிற்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை, பெங்களூரு விக்ரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி கேட்டு கன்னட திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே அம்பரீஷ் மறைவு பற்றி தகவல் அறிந்ததும் அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார், கே.ஜே.ஜார்ஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். நடிகர்கள் புனித் ராஜ்குமார், யாஷ் ஆகியோரும் மருத்துவமனைக்கு சென்று அம்பரீசின் மனைவி நடிகை சுமலதாவுக்கும், அவர் மகன் அபிஷேக்கிற்கும் ஆறுதல் கூறினார்கள்.

கன்னட நடிகர் சங்க தலைவராக இருக்கும் அம்பரீசின் மறைவுக்கு, கன்னட திரையுலகம் இரங்கலை தெரிவித்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com