\
‘விஸ்வாசம்’: யூடியூபில் 15 கோடி பார்வையாளர்களைக் கடந்த ’கண்ணான கண்ணே’ பாடல்

‘விஸ்வாசம்’: யூடியூபில் 15 கோடி பார்வையாளர்களைக் கடந்த ’கண்ணான கண்ணே’ பாடல்

‘விஸ்வாசம்’: யூடியூபில் 15 கோடி பார்வையாளர்களைக் கடந்த ’கண்ணான கண்ணே’ பாடல்
Published on

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடல் யூடியூபில் 150 மில்லியன் பார்வைக்களைக் கடந்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படம் அந்த ஆண்டில் சூப்பர் ஹிட் படமாகவும், அஜித் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாகவும் இருக்கிறது. பேபி அனிகா, விவேக், கோவை சரளா, தம்பி ராமையா என அனைவரும் நடிப்பில் கவனம் ஈர்த்தாலும் குறிப்பாக, பாடல்கள் அனைத்தும் பாராட்டுக்களைக் குவித்தது.

இதில், இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடல் மகள்களைப் பெற்ற அப்பாக்களின் கீதமாகவே மாறிவிட்டது. தாமரை வரிகளில் சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். இசையமைப்பாளர் இமான் முதன்முறையாக ‘விஸ்வாசம்’ படத்துக்கு தேசிய விருது வென்றதற்கு இப்பாடலே முதல் காரணம். இந்த நிலையில், ’கண்ணான கண்ணே’ பாடல் தற்போது யூடியூபில் 150 மில்லியன் பார்வைக்களை கடந்துள்ளது. அதாவது, 15 கோடி பேர் பார்த்துள்ளார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com