அமெரிக்காவில் எனக்கு நேர்ந்த அந்த அதிர்ச்சி இருக்கிறதே...மனம் திறந்தார் நடிகை கனிகா!

அமெரிக்காவில் எனக்கு நேர்ந்த அந்த அதிர்ச்சி இருக்கிறதே...மனம் திறந்தார் நடிகை கனிகா!

அமெரிக்காவில் எனக்கு நேர்ந்த அந்த அதிர்ச்சி இருக்கிறதே...மனம் திறந்தார் நடிகை கனிகா!
Published on

தமிழில் ’பைவ் ஸ்டார்’, ஆட்டோகிராப், வரலாறு, உட்பட பல படங்களில் நடித்தவர் கனிகா. இப்போது மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் ஷ்யாம் ராதாகிருஷ்ணனுடன் திருமணம் முடிந்து, சாய் ரிஷி என்ற மகன் உள்ளார்.
 
இந்நிலையில் அமெரிக்காவில் தனக்கு நேர்ந்த அனுபவம் பற்றி அவர் கூறியிருப்பதாவது:

திருமணம் முடிந்து கணவருடன் அமெரிக்காவில் இருந்தேன். அங்குதான் எனது மகன் பிறந்தான். அவன் ஓர் அதிசய குழந்தை. பிறந்ததுமே அவனுக்கு இதய பிரச்னை ஏற்பட்டது. இதைக் கேள்விபட்டதுமே உடைந்துவிட்டேன். உடனடியாக ஆபரேஷன் பண்ண வேண்டும். இது நூறு சதவிகிதம் வெற்றிகரமாக முடியும் என்று சொல்ல முடியாது.

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்கள். எனக்கு கண்ணீர் மட்டுமே வந்துகொண்டிருந்தது. பிறகு குழந்தையை ஐசியூ-விற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். சுமார் 50 நாட்களுக்குப் பிறகுதான் நான் அவன் முகத்தையே பார்க்க முடிந்தது. பிறகுதான் எனக்கு உயிரே வந்தது. அந்த கொடுமையான நாட்களை என்னால் மறக்க முடியாது. நான் சாய் பாபாவின் தீவிர பக்தை. அந்த சோதனையான காலக்கட்டங்களில் பாபாவிடம் வேண்டிகொண்டிருந்தேன். அதனால்தான், என் மகனை அதிசய குழந்தை என்கிறேன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com