\
போக்சோ சட்டத்தில் கங்கனாவின் ’ஹேர்டிரெஸ்சர்’ கைது!

போக்சோ சட்டத்தில் கங்கனாவின் ’ஹேர்டிரெஸ்சர்’ கைது!

போக்சோ சட்டத்தில் கங்கனாவின் ’ஹேர்டிரெஸ்சர்’ கைது!
Published on

சிறுவனை பாலியல் வன்கொடுகை செய்ததாக நடிகை கங்கனா ரனவத்தின் சிகை அலங்கார நிபுணர் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார்.

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ‘தாம் தூம்’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை கங்கனா ரனவத். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், நடிப்புக்காக தேசிய விருது பெற்றவர். கடந்த சில வருடங்களாக இவருக்கு சிகை அலங்கார நிபுணராக இருக்கிறார் பிராடன் அலஸ்டர் டிக்கி (Bradan Alaster Diggy).  இவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர். மகாராஷ்ட்ரா மாநிலம் கொலபாவில் உள்ள ராய்காடில் தங்கியிருந்த இவரை, கர் பகுதி போலீசார் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர். 

இதுபற்றி போலீசார் கூறும்போது, சிறுவனிடம் தகாத உறவு கொண்டதாக வந்த புகாரின் பேரில் இவரை கைது செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட சிறுவனின் வீட்டில் இருந்து ஒருநாள் டிக்கி வெளியேறும் சிறுவனின் அம்மா பார்த்து யார் என்று விசாரித்துள்ளார். சிறுவனின் நண்பர் என்று சொல்லிவிட்டு வெளியேறினார் டிக்கி. சந்தேகமடைந்த சிறுவனின் அம்மா, தொடர்ந்து கண்காணித்ததை அடுத்து சிறுவனை டிக்கி பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர் கொடுத்த புகாரை அடுத்து டிக்கி கைது செய்யப் பட்டார்’ என்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com