கபடி வீராங்கனையாக நடிக்க இருக்கும் படத்துக்காக 15 நாள் பயிற்சி பெறுகிறார் நடிகை கங்கனா ரனவ்த்.
தமிழில் தனுஷ் தயாரிப்பில் அமலா பால் நடித்த ’அம்மா கணக்கு’ படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர் திவாரி. இவர் அடுத்து, பெண்கள் கபடி யை மையமாக வைத்து படம் இயக்குகிறார். இதில் கங்கனா ரனவ்த் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக கபடி நுணுக்கங் களைத் தெரிந்துகொள்ள இருக்கிறார் கங்கனா. அதோடு 15 நாள் கபடி விளையாடி பயிற்சி பெறவும் இருக்கிறார்.
(அஸ்வினி ஐயர்)
இதுபற்றி கங்கனா தரப்பில் கூறும்போது, ’கங்கனா இப்போது, ’மென்டல் ஹே கியா’ என்ற படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் முடியப் போகி றது. இதையடுத்து அஸ்வினி ஐயர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்புத் தொடங்குகிறது. கபடியை பற்றிய படம். இதற்காக பயிற்சி பெற இருப்பது உண்மைதான்’ என்றனர். தேசிய அளவில் விளையாடும் கபடி வீராங்கனைகள் பற்றிய தகவல்களை திரட்டி கதையை உருவாக்கியுள்ளார் அஸ்வினி ஐயர்.
இந்தியில் விளையாட்டை மையமாக வைத்து அதிகமான படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன. அந்த வரிசையில் கபடி விளை யாட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.