“பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது” - நடிகை கங்கனா ரணாவத்

 “பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது” - நடிகை கங்கனா ரணாவத்

 “பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது” - நடிகை கங்கனா ரணாவத்
Published on

பத்திரிகையாளர்களிடத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

தமிழில் 'தாம் தூம்' எனும் படத்தில் நாயகியாக நடித்த கங்கனா ரணாவத், தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும், 'Judgementall Hai Kya' படத்தின் பாடல் வெளியீட்டு விழா மும்பையில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்ற கங்கனா, தான் இயக்கி நடித்த 'மணிக்கர்னிஹா' படத்தினை தவறாக விமர்சித்ததாக பத்திரிகையாளர்களுடன் வாக்குவாததில் ஈடுபட்டார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, கங்கனா பங்கேற்கும் நிகழ்ச்சிகளையும் அவர் குறித்த செய்திகளையும் புறக்கணிக்கப் போவதாக பொழுதுபோக்கு பத்திரிகையாளர் சங்கம் அறிவித்தது. இந்நிலையில், இன்றைய தினம் வீடியோ ஒன்றை கங்கனா ரணாவத் வெளியிட்டிருக்கிறார். அதில், தேச நலனுக்கான செய்திகளை விடுத்து, தேவையற்ற செய்திகளை பத்திரிகையாளர்கள் வெளியிட்டுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டு, பத்திரிகையாளர்கள் மீது கடுமையான பல்வேறு விமர்சனங்களையும் முன் வைத்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் உடனான மோதலுக்கு மன்னிப்புக் கேட்டு, பிரச்னையை முடித்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ மேலும் பிரச்னையை அதிகப்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com