''எனது அம்மா ஒரு பட்டியலின பெண்ணை தத்தெடுத்தார்'' - நினைவுகளை பகிர்ந்த நடிகை கங்கனா
தன்னுடைய அம்மா அப்போது ஒரு பட்டியலின பெண்ணை தத்தெடுத்து வளர்த்ததாக நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள அவர், நண்பர்களே பட்டியலினத்தவர்கள் மீதான பிரச்னை குறித்த பல செய்திகளில் என்னை டேக் செய்கிறீர்கள். என்னுடைய வாழ்வில் நடந்த கதையை சொல்கிறேன். புகைப்படத்தில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் இவர் என்னுடைய சகோதரி ராஜுடி. அப்போது என்னுடைய அம்மா புதிதாக திருமணம் ஆனவர். அப்போது கிராமத்தில் 3 பெண் குழந்தைகளுடன் பட்டியலின பெண் ஒருவர் வருமானம் இன்றி தவித்து வந்துள்ளார்.
அப்போது பலரின் எதிர்ப்பையும் மீறி என் அம்மா கடைசி பெண் குழந்தையை தத்தெடுத்தார். அவர் தான் ராஜுடி. அவரை பள்ளிக்கு அனுப்பினார். கல்லூரிக்கு அனுப்பினார். அவருக்கு திருமணம் முடிந்தது. இந்த வாரம் ராஜுடியின் மகனுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. அவர் ஒரு பிராமணர் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இது எந்த ஊடகத்திலும் வராது. என தெரிவித்துள்ளார். மேலும் ராஜுடி எங்கள் வீட்டில் ஒரு சகோதரியாகவே வளர்ந்தார்.
ஆரம்பத்தில் சமையலறையில் அவர் அம்மாவுக்கு உதவியாக இருப்பார். ராஜுடிக்கு உணவு பரிமாற அம்மா மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. சில உறவினர்கள் அம்மாவுக்கு எதிராகவும் பேசினார்கள். என பல நினைவுகளை தெரிவித்துள்ளார். மேலும் இந்த இந்தியாதான் எனக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.