\
கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்
Published on

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்திற்கு ’யு’ சான்றிதழ் அளித்துள்ளனர் தணிக்கைக் குழுவினர்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தை ஏ.எல் விஜய் இயக்குகிறார். இதில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ஏப்ரல் 23 ஆம் தேதி  ’தலைவி’ வெளியாகும் என்று அறிவித்த படக்குழு, பின்பு கொரோனாவால் படத்தை இப்போதைக்கு வெளியிட முடியாது என்று விளக்கம் தந்தது.

இப்படத்தின் முதல் பாடல் ’மழை மழை’ வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில்,  தமிழ் மொழி படத்திற்கு மட்டும் தற்போது ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு. விரைவில் தெலுங்கு, இந்திக்கும் கொடுப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனால், படக்குழு உற்சாகமுடன் இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com