\
’கொரோனா சாதாரண காய்ச்சல்’ - கங்கனா ரனாவத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம்!

’கொரோனா சாதாரண காய்ச்சல்’ - கங்கனா ரனாவத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம்!

’கொரோனா சாதாரண காய்ச்சல்’ - கங்கனா ரனாவத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம்!
Published on

’கொரோனா சாதாரண காய்ச்சல்’ என்று தவறான தகவலைப் பரப்பியதாக நடிகை கங்னா ரணாவத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

 பாலிவுட்டின் பிரபல நடிகையான கங்னா ரணாவத் சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு வந்தார். இதனால், தொடர்ந்து தவறான தகவல்களை பரப்புவதாக அவரது ட்விட்டர் பக்கம் சமீபத்தில் நீக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா என்பது சாதாரண காய்ச்சல் மட்டுமே, அதனால் பயத்திலிருந்து முதலில் வெளியே வர வேண்டும் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை சாதாரண காய்ச்சல் என பதிவிட்டதால் கங்கனாவின் பதிவிற்கு எதிர்ப்புகள் கிளம்ப, இன்ஸ்ட்கிராம் அந்தப் பதிவை நீக்கியிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com