\
இந்தி ஹீரோ ஹிர்த்திக் ரோஷன் மீது கங்கனா மீண்டும் பாய்ச்சல்!

இந்தி ஹீரோ ஹிர்த்திக் ரோஷன் மீது கங்கனா மீண்டும் பாய்ச்சல்!

இந்தி ஹீரோ ஹிர்த்திக் ரோஷன் மீது கங்கனா மீண்டும் பாய்ச்சல்!
Published on

மனைவிகளை கோப்பைகள் போல் வைத்துவிட்டு இளம் பெண்களை எஜமானி போல் பாவிக்கும் ஆண்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நடிகை கங்கனா ரனவத் கூறியுள்ளார்.

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ’தாம் தூம்’ படத்தில் நடித்தவர் கங்கனா ரனவத். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் அவர் ’குயின்’ படத்தில் நடித்த போது அதன் இயக்குனர் விகாஸ் பாஹ்ல் தன்னை இறுக்கி அணைத்துக்கொண்டு என் கூந்தல் வாசனையை நுகர்வார் என்று பரபரப்பு புகாரை கூறியிருந்தார். 

இந்நிலையில் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘இயக்குனர் விகாஸ் பற்றி நான் சொன்னது அனைத்தும் உண் மை. நம் சினிமா துறையில் பெண்களிடம் நேர்மையாக நடந்து கொள்ளும் ஆண்கள் குறைவுதான். அவர்கள் பெண்களு க்கு பாலியல் தொல்லைக் கொடுக்கிறார்கள். தாக்குகிறார்கள்... அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.

மனைவிகளை கோப்பை களை போல வீட்டில் வைத்துவிட்டு இளம்பெண்களை எஜமானிகளைப் போல நடத்துபவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். நான் ஹிர்த்திக் ரோஷனை சொல்கிறேன். அவருடன் யாரும் பணியாற்றக் கூடாது’ என்றார்.

திருமணமான நடிகர் ஹிர்த்திக் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றியதாக ஏற்கனவே கங்கனா தெரிவித்திருந்தார். இதுபற்றிய சர்ச்சை எழுந்து இந்திய சினிமாவில் புயலைக் கிளப்பி ஓய்ந்த நிலையில் இப்போது மீண்டும் ஹிர்த்திக் ரோஷன் மீது புகார் தெரிவித்துள்ளார் கங்கனா.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com