\
கங்கனாவை 80 வயது பாட்டியாக எப்படி பார்ப்பது?

கங்கனாவை 80 வயது பாட்டியாக எப்படி பார்ப்பது?

கங்கனாவை 80 வயது பாட்டியாக எப்படி பார்ப்பது?
Published on

தேஜு என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் நடிகை கங்கனா. இதில் விசேஷம் என்னவென்றால் இந்தப் படத்தில் அவர் 80 வயது பாட்டியாக நடிக்கப் போகிறாராம்!

தமிழில் ’தாம் தூம்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர் இந்தி நடிகை கங்கனா. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், பேஷன், குயின், தனு வெட்ஸ் மனு ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர். இவர் இப்போது, ’தேஜு’ என்ற படம் மூலம் டைரக்டர் ஆகப் போகிறார்.

‘இது சீனியர் சிட்டிசன்களை பற்றிய கதை. சமூகத்தால் அவர்கள் எப்படி புறக்கணிப்படுகிறார்கள், அவர்களுக்கான தேவை என்ன, அவர்களின் வலி ஆகியவற்றைப் பற்றி பேசும் படம் இது. இதன் கதை, வசனத்தை நானே எழுதியுள்ளேன். சிறு வயதில் ஏராளமான வயதானவர்கள் என்னைச் சுற்றி இருப்பார்கள். அவர்களை வைத்தே இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறேன். டிசம்பரில் ஷூட்டிங் தொடங்குகிறது’ என்றார் கங்கனா.

இதில் 80 வயது பாட்டியாக கங்கனாவே நடிக்க இருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com