ஹிந்தியில் அக்‌ஷய் குமாருடன் இணையும் ராகவா லாரன்ஸ்

ஹிந்தியில் அக்‌ஷய் குமாருடன் இணையும் ராகவா லாரன்ஸ்

ஹிந்தியில் அக்‌ஷய் குமாருடன் இணையும் ராகவா லாரன்ஸ்
Published on

ஹிந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்க உள்ள ‘காஞ்சனா’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்க உள்ளார்.

‘காஞ்சனா’திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், லக்ஷ்மி ராய், கோவை சரளா,தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்திருந்தனர். 

இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் வந்த ‘முனி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இது விளம்பரப்படுத்தப்பட்டது. இப்படம் பயம் கலந்த நகைச்சுவை படமாக அமைந்தது. இந்தப் படத்திற்கு ராகவா லாரன்ஸ் கதை எழுதி, தயாரித்து இயக்கி இருந்தார்.

இந்நிலையில், உலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்ற ‘காஞ்சனா’ படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப் பட உள்ளது. இப்படத்தை ஹிந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்க உள்ளார். லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகர்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 

ராகவா லாரன்ஸ் முதன் முதலாக ஹிந்திப் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட்டிற்கு செல்கிறார். மற்ற நட்சத்திரங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப் பட உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு  ஏப்ரல் மாதம் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் அக்‌ஷய் குமார் பேசும் போது, “ஹாரர் காமெடி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். 'பூல் புலையா' மாதிரியான படங்களில் நடிக்க எனக்கு ஆசை. அம்மாதிரியான கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்,” எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்‌ஷய் குமார் கடைசியாக தமிழில் சங்கர் இயக்கத்தில் வெளியான ‘2.0’ படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகுந்த பாராட்டை பெற்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com