’காஞ்சனா 3’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது.
ராகவா லாரன்ஸ் நடித்த ’காஞ்சனா’ படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து அதன் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வருகிறார் லாரன்ஸ். காஞ்சனா 2 வசூலில் சாதனை படைத்ததை அடுத்து, அதன் 3-ம் பாகத்துக்கும் இப்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் ஓவியா, வேதிகா, புதுமுகம் நிகிதா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இந்த மாதம் முழுவதும் ஷூட்டிங் நடக்கிறது. வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். ‘லாரன்ஸ், இந்தப் படத்தை நான்கு மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார். அடுத்த வருடம் தமிழ்ப் புத்தாண்டுக்கு படம் வெளியாகும்’ என்று படக்குழு தெரிவித்துள்ளது.