டிசம்பர் 21 அன்று வெளியாகும் ‘கனா’

டிசம்பர் 21 அன்று வெளியாகும் ‘கனா’

டிசம்பர் 21 அன்று வெளியாகும் ‘கனா’
Published on

டிசம்பர் 21ம் தேதி ‘கனா’ திரைப்படம் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ்த் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தற்போது தவிர்க்க முடியாத ஒரு நாயகனாகவும் வளர்ந்துள்ளார். நடிகனாக இருந்த அவர் தற்போது தயாரிப்பாளராக அவதாரமெடுத்துள்ளார். இவர் தயாரிக்கும் படத்தில் தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர் அருண்ராஜா காமராஜை இயக்குனராக அறிமுகப்படுத்தியுள்ளார்.

அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள ‘கனா’ திரைப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் மகள் பாடிய ‘யார் இந்தத் தேவதை’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அந்தப் பாடல் கவர்ந்தது.

மேலும்‘கனா’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தமிழில் விளையாட்டு தொடர்பான படங்களுக்கு இது நல்ல தொடக்கமாக அமையும் என பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் வரும் 21ம் தேதி இத் திரைப்படம் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே கிறிஸ்துமஸ் ரேசில் பல படங்கள் உள்ள நிலையில் இத்திரைப்படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com