\
கமல் பிறந்தநாள் உடை: சந்தேகம் எழுப்புகிறார் கஸ்தூரி

கமல் பிறந்தநாள் உடை: சந்தேகம் எழுப்புகிறார் கஸ்தூரி

கமல் பிறந்தநாள் உடை: சந்தேகம் எழுப்புகிறார் கஸ்தூரி
Published on

கமல் தனது பிறந்த நாளான இன்று பதான் சூட் அணி வந்திருந்தது சம்பந்தமாக ஒரு சந்தேகத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி கிளப்பியுள்ளார்.

பொதுவாக கமல் பொது நிழச்சிகளில் கலந்து கொள்ளும்போது அதிகமாக கறுப்பு உடைகளை அணிவது வழக்கம். அவரே தனக்கு கறுப்பு நிறமே அதிகம் பிடிக்கும் என்று கூறியும் இருக்கிறார். அவரது அலுவலகம் முழுக்க கறுப்பு மற்றும் வெள்ளையிலேயே இருக்கும். தன் அலுவலக அறை உள் கட்டமைப்புகளை கறுப்பு நிறத்தில் கமல் வடிவமைத்து வைத்துள்ளார். அரசியல் சர்ச்சைகள் அவரை வலம்வர தொடங்கிய பிறகு வேஷ்டி சட்டையில் மாறி போஸ் கொடுத்ததும் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. ஆனால் இன்று பிறந்தநாள் உடையாக அவர் பதான் சூட் அணிந்திருந்தார். சுருக்கமாக சொன்னால் மோடி ஸ்டைலில் இருந்தார். எல்லோரும் எதிர்பார்த்த வேஷ்டியை காணோம். 
இந்த நிலையில் இன்று கமலை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறி வந்த நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழ் வேட்டி கட்டாமல் பதான்சூட் போட காரணம் என்ன? ஒருவேளை டெல்லிதான் குறியோ?” என கேட்டிருக்கிறார். கூடவே ‘வெறுங்கையோடு போய் கொடுத்து வந்தேன் நம்பிக்கை” என்றும் குறிப்பிட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com