இந்தியன் 2 வருமா வராதா? கமல் கூறியது என்ன? - அண்மைத் தகவல்கள் இதோ!

இந்தியன் 2 வருமா வராதா? கமல் கூறியது என்ன? - அண்மைத் தகவல்கள் இதோ!

இந்தியன் 2 வருமா வராதா? கமல் கூறியது என்ன? - அண்மைத் தகவல்கள் இதோ!
Published on

திரைத்துறையின் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் குறித்த அப்டேட்டை அவரே வெளியிட்டிருக்கிறார்.

விக்ரம் பட புரோமோஷனுக்கான பேட்டியின் போது இந்தியன் 2 குறித்து கமல்ஹாசன் பேசியிருந்தார். அப்போது, ‘பொருளாதார சிக்கல் காரணமாக இந்தியன் 2 படபிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் நிச்சயம் படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கப்படும்.

ரசிகர்களை காட்டிலும் நானும் இயக்குநர் ஷங்கரும் இந்தியன் 2 படத்துக்காக மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கிறோம். இதுவரை எடுக்கப்பட்ட ஷூட்டிங் அனைத்தும் நன்றாகவே வந்திருக்கிறது. ராம் சரணின் RC 15 படத்தின் வேலைகளை ஷங்கர் முடித்ததும் இந்தியன் 2 படத்தின் பணிகள் தொடங்கும்.” எனக் கூறியுள்ளார் கமல்ஹாசன்.

முன்னதாக 2020ம் ஆண்டு இந்தியன் 2 ஷூட்டிங்கின் போது கிரேன் விழுந்த விபத்தில் நால்வர் உயிரிழந்ததாக கூறப்பட்டதாலும், ஃபைனான்ஸ் பிரச்னை, கொரோனா ஊரடங்கு போன்றவற்றால் படத்தின் வேலைகள் தடைபட்டது. இன்னும் 40 சதவிகித படபிடிப்புகளே நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க இருக்கிறார். படத்தில் காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, நெடுமுடிவேனு ஆகியோர் நடிக்கிறார்கள்.

இதனிடையே அண்மையில் வெளியாகி மூன்று வாரங்களாக தியேட்டரில் ஒடிக் கொண்டிருக்கும் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனின் விக்ரம் 2, இந்தியன் 2 ஆகிய படங்களின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளதும் நினைவுக்கூரத்தக்கது.

இப்படி இருக்கையில், இந்தியன் 2 படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் டிவி கைப்பற்றியிருப்பதாகவும், விக்ரமை தொடர்ந்து இந்தியன் 2ம் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸே வெளியிட இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com