சினிமா
”கமல்ஹாசன் உடல்நிலை சீராக உள்ளது” - மருத்துவமனை அறிக்கை
”கமல்ஹாசன் உடல்நிலை சீராக உள்ளது” - மருத்துவமனை அறிக்கை
கொரோனா சிகிச்சை மேற்கொண்டுவரும் நடிகர் கமல்ஹாசன் உடல்நிலைக்குறித்து மருத்துவமனையின் அறிக்கை வெளியாகி இருக்கிறது.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கம்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 22 ஆம் தேதி பதிவிட்டுள்ளார். மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவரின் உடல்நிலைக்குறித்து தற்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது. அதில், கமல்ஹாசன் நன்கு தேறி வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.