\
பாதுகாப்புப் படை வீரரை தாக்கியது வெட்கக்கேடானது: கமல்ஹாசன்

பாதுகாப்புப் படை வீரரை தாக்கியது வெட்கக்கேடானது: கமல்ஹாசன்

பாதுகாப்புப் படை வீரரை தாக்கியது வெட்கக்கேடானது: கமல்ஹாசன்
Published on

ஜம்மு காஷ்மீரில் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை, இளைஞர்கள் தாக்கியது வெட்கக் கேடானது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், இந்தியாவுடன் ஒருங்கிணையுங்கள் என கூறியுள்ளார். பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான இளைஞர்களின் தாக்குதல் வெட்கக்கேடானது எனவும் அவர் கூறியுள்ளார்.

அஹிம்சையே வீரத்தின் உச்சம் எனக் கூறியிருக்கும் கமல்ஹாசன், தன்னைத் தாக்கிய இளைஞர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தாமல் அந்த வீரர்கள் சிறந்தஉதாரணத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் மீது உள்ளூர் இளைஞர்கள்தாக்குதல் நடத்தும் காட்சி வைரலாக பரவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com