அமெரிக்காவில் சவுண்ட் மிக்சிங் வேலையை முடித்தார் கமல்

அமெரிக்காவில் சவுண்ட் மிக்சிங் வேலையை முடித்தார் கமல்

அமெரிக்காவில் சவுண்ட் மிக்சிங் வேலையை முடித்தார் கமல்
Published on

அமெரிக்காவில் நடைபெற்று வந்த சவுண்ட் மிக்சிங் வேலையை முடிந்துவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

’விஸ்ரூபம்2’ வேலைகள் சம்பந்தமாக கமல் அமெரிக்கா சென்றிருந்தார். அதனால்தான் அவரால் கன்னியாகுமரி ஒகே புயல் சார்ந்த விஷயங்களில் நேரடியாக ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டது. அமெரிக்காவிலிருந்து ரஜினி பிறந்த நாளுக்குகூட அவர் தாமதமாகவே வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அமெரிக்காவில் ‘விஸ்வரூபம்2’ சம்பந்தமான சவுண்ட் மிக்சிங் வேலைகள் முடிந்துவிட்டதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் “ விஸ்வரூபம்2 காட்சிகள் சவுண்டுடன் சிறப்பாக வந்துள்ளது. இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி. மேரி, குனல், சிரிஸ் உள்ளிட்ட குழுவினருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘விஸ்வரூபம்’ முதல் பாகம் வெளியாவதற்கு முன்பு பெரிய சர்ச்சையில் சிக்கியது. அதனை தொடர்ந்து அவர் முன்பே எடுத்து வைத்திருந்த இரண்டாம் பாகம் வேலைகள் தடைபட்டன. தயாரிப்பாளரின் பெருளாதார நெருக்கடிகள் படத்தை வெளியிட முடியாத அளவுக்கு சிக்கலை மேலும் அதிகப்படுத்தின. கடந்த சில வாரங்கள் முன்பு ராணுவ துறையினருக்கான சென்னை ஆஃபீஸர் அகாதெமியில் படப்புடிப்பு மீண்டும் தொடங்கியது. இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை கமல்ஹாசன் இயக்கி வருகிறார். ஜிப்ரான் தொடர்ந்து கமல் படங்களுக்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com