\
மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டம் வெல்லும்.... கமல்ஹாசன்

மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டம் வெல்லும்.... கமல்ஹாசன்

மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டம் வெல்லும்.... கமல்ஹாசன்
Published on

மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டம் வெல்லும். ஊக்கமது கைவிடேல் என ஜல்லிக்காட்டிற்கு ஆதரவாக கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுபெற்று வருகிறது. இந்நிலையில், தன்னெழுச்சியாக ஓயாமால் போராடும் போராட்டகாரர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், ராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமும் வெல்லும். ஊக்கமது கைவிடேல் என பதிவிட்டுள்ளார்.

மேலும் தமிழக மக்களுக்கு வாழ்த்துகள். நமதி அதிருப்திகளை வெளிக்காட்டுவதற்கான ஒரு எடுத்துக்காட்டுதான் இந்த போராட்டம். நாம் காயமடைந்தது போதும். தற்காலிக குணமாக இல்லாமல் காயங்களை முற்றிலும் குணப்படுத்துங்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com