\
தயாரிப்பாளர் சங்க தேர்தல்: தலைவர் பதவிக்கு விஷாலை முன்மொழிந்தார் கமல்

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: தலைவர் பதவிக்கு விஷாலை முன்மொழிந்தார் கமல்

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: தலைவர் பதவிக்கு விஷாலை முன்மொழிந்தார் கமல்
Published on

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நடைபெறவிருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக நடிகர் விஷால் அறிவித்திருந்தார். இந்நிலையில் விஷால் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை நடிகர் கமல்ஹாசன் முன்மொழிவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஷால் தாக்கல் செய்துள்ள வேட்புமனு படிவத்தில் ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் நிரந்தர உறுப்பினரும், வரும் தேர்தலில் வாக்களிக்க உரிமையுடையவருமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனரான நான் 2017-2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் நிரந்தர உறுப்பினராக உள்ள விஷால் கிருஷ்ணா அவர்களை முன் மொழிகிறேன்’என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அவரது வாழ்த்துக்களைப் பெற்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com