இசையமைப்பாளர் இளையராஜாவை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசன் மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்துப்பேசினார்.
இசைஞானி இளையராஜா கடந்த பிப்ரவரி மாதம் சென்னை கோடம்பாக்கத்தில் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கினார். “இளையராஜா ஸ்டுடியோ” என்ற பெயரிடப்பட்ட அந்த ஸ்டுடியோவில் படங்களுக்கு இசையமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இளையராஜா ஸ்டூடியோ தொடங்கியதும், நடிகர் ரஜினி, விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசன் கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு நேரில் சென்று மரியாதை நிமிர்த்தமாக இளையராஜாவை பூங்கோத்து கொடுத்து சந்தித்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.