\
தெலுங்கு பிக்பாஸில் கமல்: உற்சாகத்தில் நடிகர்கள்

தெலுங்கு பிக்பாஸில் கமல்: உற்சாகத்தில் நடிகர்கள்

தெலுங்கு பிக்பாஸில் கமல்: உற்சாகத்தில் நடிகர்கள்
Published on

நடிகர் கமல்ஹாசன் ‘விஸ்வரூபம்2’ படத்தின் விளம்பரத்திற்காக தெலுங்கு ‘பிக்பாஸ்’ வீட்டிற்குச் சென்றுள்ளார்.

கமல்ஹாசன் இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘விஸ்வரூபம்2’. பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், நாசர் ஆகியோர் நடித்துள்ள இப்படம் வருகிற 10-ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் கடந்த சில நட்களாகவே பல்வேறு இடங்களுக்கும் கமல்ஹாசன் உட்பட்ட படக்குழுவினர் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அண்மையில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் ‘தஸ் கா தம்’நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். 

இந்நிலையில் தெலுங்கில் ‘நான் ஈ’ புகழ் நானி தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றுள்ள பிரோமோவை சம்பந்தபட்ட தொலைக்கட்சி வெளியிட்டுள்ளது. அதில், தெலுங்கு பிக்பாசில் கமல்ஹாசன் வருகிறார் என நானி அறிமுகப்படுத்துகிறார். அதன் பின் கமல் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவது மாதிரியான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும் பிரபலங்கள் கமல் வருவதை பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றனர்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com