கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர்169’ ?

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர்169’ ?

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர்169’ ?
Published on

ரஜினியின் 169வது படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘மாநகரம்’ திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது இரண்டாவது படமான ‘கைதி’யையும் சிறப்பாக கொடுத்தார். அடுத்து விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு படங்களில் தனக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ள லோகேஷ் கனகராஜ் விஜயுடன் இணைந்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பலராலும் கவனம் பெறும் இயக்குநராகியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழாவில் லோகேஷுக்கு விருது வழங்கிய கமல்ஹாசன், ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது. நேரம் வரும் போது சொல்கிறேன் என தெரிவித்தார். கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் படம் இயக்கப்போவதாகவும், அதனையே அவர் சூசகமாக தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ரஜினியின் அடுத்தப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் 168வது படத்தில் தற்போது நடித்துவருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com