\
“நாட்டை இப்படி ஆக்கிவிட்டார்களே” - கோபங்களை சொன்ன கமல்ஹாசன்

“நாட்டை இப்படி ஆக்கிவிட்டார்களே” - கோபங்களை சொன்ன கமல்ஹாசன்

“நாட்டை இப்படி ஆக்கிவிட்டார்களே” - கோபங்களை சொன்ன கமல்ஹாசன்
Published on: 

தனது நாட்டை இப்படி ஆக்கிவிட்டார்களே என கோபம் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் எனும் நிகழ்ச்சியின் சீசன் 3 இன்று தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சில அரசியல் கருத்துக்களை இடையே இடையே கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி, இன்றைய நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஜெயில்ல சூப்பர் மார்க்கெட் இருக்கா ? தமிழ்நாட்டுல தமிழர்களுக்கு வேலை இருக்கா  ? ஒரு தாய் மக்கள் நாமென்போம்” என்றெல்லாம் கூறினார். 

அத்துடன், “நல்ல நாட்டை பார்த்தால் கோபம். எனது நாட்டை பார்த்தாலும் கோபம். ஏனென்றால் எனது நாட்டை இப்படி ஆக்கிவிட்டார்களே எனக் கோபம். ஷவரில் குளிப்பவர்களை பார்த்தாலும் கோபம். சாக்கடையில் தண்ணீரை கலப்பதை பார்த்தாலும் கோபம். நாட்டை மாற்ற வேண்டுமென்றுமானால் கோபம் வேண்டும். ஆனால் அந்த மாற்றம் மையப்புள்ளியில் இருந்துதான் தோன்றும். அதனால் தான் நான் பாரதி சொன்னதுபோல ரெளத்திரம் பழகிக்கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com