வீரத்தின் உச்சகட்டமே அஹிம்ஸை: அமைதி காக்க கமல் வேண்டுகோள்

வீரத்தின் உச்சகட்டமே அஹிம்ஸை: அமைதி காக்க கமல் வேண்டுகோள்

வீரத்தின் உச்சகட்டமே அஹிம்ஸை: அமைதி காக்க கமல் வேண்டுகோள்
Published on

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இதுவரை பொதுச்சொத்திற்க்கு எச்சேதமுமில்லாமல் நடந்த இப்போராட்டம் அமைதி இழக்கக்கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவின் மூத்த தலைமை ஆவன செய்ய வேண்டும் எனக் கூறியுள்ள கமல் செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வீரத்தின் உச்சகட்டமே அஹிம்ஸை. அறவழிப் போராளிகள் ரத்தக் காயம் படுவது இதுவரை நிகழாததல்ல. அமைதி காக்கும் கடமை உமது. வெகுளாதிருத்தலே விவேகம்.

வன்முறை பயன்தராது. இதுவரை காத்த அறத்தை கைவிடாதீர். வன்முறை செய்வது மாணவர்களாக இருக்கக் கூடாது. மக்களாக இருக்கக் கூடாது.

யார் ஒருவர் கண்ணியம் தவறினாலும் அது சங்கமித்திருக்கும் அனைவரையும் பாதிக்கும். வாழ்த்துக்கள் விமர்சனமாகாதிருக்க விரசக் கேலிகளை தவிர்க்கவும் என கமல் தனது ட்விட்டர் பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com