ரசிகரை கமல்ஹாசன் தடுத்தாரா? தள்ளிவிட்டாரா? வைரலாகிய வீடியோ
நடிகர் கமல்ஹாசன், தன் காலில் விழுந்த ரசிகரை தள்ளிவிட்டதாக வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் சமூக
வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் கடந்த சிலமாதங்களாக ட்விட்டரில் அரசியல் குறித்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அத்துடன் தான்
அரசியலுக்கு வரப்போவதாகவும் கூறியுள்ளார். அத்துடன் அவரது பிறந்த தினமான கடந்த 7ஆம் தேதி, மக்களின் கருத்துக்களை
அறிவதற்கு மையம் விசில் என்ற ஒரு செல்போன் செயலியையும் வெளியிட்டுள்ளார். மேலும் விரைவில் தனது கட்சியின்
பெயரை அறிவிப்பேன் என ஆங்கிலத் தொலைக்காட்சியின் பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தன்னை சந்திக்க வந்த ரசிகர் ஒருவரை கமல்ஹாசன் தள்ளிவிட்டதுபோல் வீடியோ காட்சிகள் சமூக
வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், கமல்ஹாசன் வருவதை பார்த்து ஏராளமான ரசிகர்கள்
வரவேற்று முழக்கமிடுகின்றனர். அப்போது ரசிகர் ஒருவர் கமலின் காலில் விழுந்து வணங்க முயன்றதாக தெரிகிறது. அப்போது
அவரை கமல்ஹாசன் தள்ளிவிட்டு செல்வது போல் அந்த வீடியோவில் காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகள் எப்போது
எடுக்கப்பட்டது? எங்கே இந்த சம்பவம் நடைபெற்றது? என்பது பற்றிய தகவல்கள் தெரியவரவில்லை.