நல்லவர் யார்..? கெட்டவர் யார்..? வீடியோ வெளியிட்ட கமல்

நல்லவர் யார்..? கெட்டவர் யார்..? வீடியோ வெளியிட்ட கமல்

நல்லவர் யார்..? கெட்டவர் யார்..? வீடியோ வெளியிட்ட கமல்
Published on

பிக்பாஸ் 2-வது சீசனிலும் 15 பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதனை தனது இரண்டாவது டீசரில் உறுதி செய்திருக்கிறார் கமல்ஹாசன்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். 15 பிரபலங்கள் ஒரு வீட்டில் பங்கேற்பார்கள். முடிவில் கடைசி வரை யார் தாக்குப் பிடிக்கிறார்களோ அவர்களில் ஒருவர் மக்கள் போடும் வாக்கை பொறுத்து வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். மொத்தமாக 100 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறும். மக்கள் மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதனைப் பயன்படுத்திக் கொண்ட கமல்ஹாசன் நிகழ்ச்சிக்கு இடையே அடிக்கடி அரசியலும் பேசி வந்தார்.

இதனிடையே பிக்பாஸ் 2 பாகம் விரைவில் வெளிவர இருப்பதாக தகவல் கசிந்தது. அதனை கமல்ஹாசனும் அண்மையில் உறுதி செய்தார். இந்நிலையில் பிக்பாஸ் 2 பாகம் தொடர்பான இரண்டாவது டீசரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். கடந்த முறை 15 பேர் போட்டியாளராக பங்கேற்ற நிலையில் இந்த முறையும் 15 பேர் அதில் பங்கேற்க உள்ளனர். 60 கேமராக்கள் அவர்களை கண்காணிக்க உள்ளன. இருப்பினும் அந்த 15 நபர்கள் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. நல்லவர் யார்.. கெட்டவர் யார்..? என்பதை தெரிந்துகொள்ள காத்திருக்குமாறும் கமல்ஹாசன் அந்த டீசரில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com