“என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது” - ‘கிரேஸி’ குறித்து கமல்ஹாசன்

“என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது” - ‘கிரேஸி’ குறித்து கமல்ஹாசன்

“என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது” - ‘கிரேஸி’ குறித்து கமல்ஹாசன்
Published on

நகைச்சுவை வசனகர்த்தா கிரேஸி மோகன் உயிரிழப்பு குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். இவரது இறப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “நண்பர் கிரேசி மோகன் அவர்கள் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாது மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது. பல நண்பர்கள் லெளகீகம் பழகிக்கிறேன் பேர்வழி என்ற அந்த அற்புதமான குணத்தை இழந்திருக்கின்றனர். “கிரேசி” என்பது அவருக்கு பொருந்தாத பட்டம். அவர் ‘நகைச்சுவை ஞானி’” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “இன்று அவரது சகோதரர் பாலாஜி அவர்களுடன் இணைந்து நண்பர் மோகன் அவர்களின் நெற்றியில் கைவைத்து பிரியாவிடை கொடுத்தோம். நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. ஆள் இருந்தால்தான் நட்பா என்ன ? மோகன் அவர்களின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும், அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன். அவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக்குடும்பம், அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது” என்று குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com