காரைக்குடி: கமல்ஹாசன் - விஜய் சேதுபதி காட்சிகளை படமாக்கும் ‘விக்ரம்’ படக்குழு

காரைக்குடி: கமல்ஹாசன் - விஜய் சேதுபதி காட்சிகளை படமாக்கும் ‘விக்ரம்’ படக்குழு

காரைக்குடி: கமல்ஹாசன் - விஜய் சேதுபதி காட்சிகளை படமாக்கும் ‘விக்ரம்’ படக்குழு
Published on

கமல்ஹாசனின் ’விக்ரம்’படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் காரைக்குடியில் தொடங்கியுள்ளது.

’மாஸ்டர்’ வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி - கமல்ஹாசன் காட்சிகள் காரைக்குடியில் வரும் 27 ஆம் தேதி தொடங்குவதாக லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்தவாரம் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று முதல் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்குகிறது. கமல்ஹாசன் - விஜய் சேதுபதி காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com