விக்ரம் படத்துக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடிகர் கமல்ஹாசன் தனது 67வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு திரையுலகினர், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் கமல்ஹாசனை இயக்குநர் ரஞ்சித் அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, புதிய படத்தில் இருவரும் கைகோர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் கமல், ரஞ்சித் கூறிய ஒன்லைன் கதையால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகவும், முழு ஸ்கிரிப்டையும் தயாரிக்கும்படி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும், 'விக்ரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், அவர் அடுத்தாக மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து ரஞ்சித்தின் இயக்கும் புதிய படத்தில் அவர் கைகோர்க்கலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது.