\
விஸ்வரூபம்-2 பாடல் வெளியீட்டு தேதியை அறிவித்த கமல் !

விஸ்வரூபம்-2 பாடல் வெளியீட்டு தேதியை அறிவித்த கமல் !

விஸ்வரூபம்-2 பாடல் வெளியீட்டு தேதியை அறிவித்த கமல் !
Published on

விஸ்வரூபம்-2 படத்தின் பாடலை அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன் இயக்கி, நடித்த திரைப்படம் விஸ்வரூபம். இது 2013ம் ஆண்டு வெளியானது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் ஆகியோர் நடித்திருந்தனர். முதல்பாகம் எடுக்கும்போதே இரண்டாம் பாகத்திற்கான பல காட்சிகளும் எடுக்கப்பட்டுவிட்டதாக பட குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனாலும் சில காரணங்களால் படம்வெளியாவதில் தமாதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துவந்தது. 

இந்தநிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. தமிழ்ப் பாகத்தின் ட்ரெய்லரை ஸ்ருதிஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் தெலுங்கு ட்ரெய்லரை ஜூனியர் என்.டி.ஆரும், இந்தி பாகத்தின் ட்ரெய்லரை அமீர்கானும் வெளியிட்டனர். இந்த ட்ரேய்லர் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் படத்தின் பாடல் அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com