தீபிகா படுகோனே பாதுகாக்கப்பட வேண்டும்: 'பத்மாவதி'க்கு கமல்ஹாசன் ஆதரவு

தீபிகா படுகோனே பாதுகாக்கப்பட வேண்டும்: 'பத்மாவதி'க்கு கமல்ஹாசன் ஆதரவு

தீபிகா படுகோனே பாதுகாக்கப்பட வேண்டும்: 'பத்மாவதி'க்கு கமல்ஹாசன் ஆதரவு
Published on

சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 'பத்மாவதி' திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த படப் பிரச்னையில் நடிகை தீபிகா படுகோனே பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். உடலுக்கு தலை எவ்வளவு முக்கியமோ, அதுபோல் அவருக்கான சுதந்திரத்தை மறுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். தன்னுடைய திரைப்படங்களுக்கும் பல்வேறு சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள கமல்ஹாசன், இது சிந்திப்பதற்கான நேரம் என்று குறிப்பிட்டுள்ளார். வன்முறையுடன் கூடிய எந்த விவாதமும் மோசமானதாகும் என்றும் கமல் கூறியிருக்கிறார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்மாவதி’ இந்தி திரைப்படம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. அதில் ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினி வேடத்தில் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தீபிகா படுகோனின் தலையை வெட்டினால் 10 கோடி ரூபாய் பரிசு தரப்படும் என ஹரியானா மாநில பாரதிய ஜனதா ஊடகப் பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் சூரஜ்பால் சர்ச்சை கருத்து கூறியிருந்தார். இதனிடையே, சர்ச்சைக்குள்ளான பத்மாவதி திரைப்படம் ரிலீஸ், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com