கமலின் ‘விக்ரம்’ தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா? - வெளியான தகவல்

கமலின் ‘விக்ரம்’ தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா? - வெளியான தகவல்

கமலின் ‘விக்ரம்’ தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா? - வெளியான தகவல்
Published on

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படம் ஒருவாரத்திலேயே, தமிழகத்தில் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், நரேன், சந்தான பாரதி, காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன்தாஸ், சூர்யா ஆகியோரின் நடிப்பில், கடந்த 3-ம் தேதி வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. வழக்கமாக கமல்ஹாசனின் படங்கள் கதைக்களம், திரைக்கதைக்காக பாராட்டப் பெற்றாலும், வசூலில் சாதனை என்பது சற்று குறைவாகவே இருக்கும்.

ஆனால் கடந்த வாரம் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் முழுக்க முழுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜின் திரைப்படமாக இருந்ததுடன், மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகி இருப்பதால் அனைத்து தரப்பு பார்வையாளர்களை படம் கவர்ந்துள்ளது. இதனால் படக்குழு எதிர்பார்த்ததைவிட, ‘விக்ரம்’ படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி, படம் வெளியான 7 நாட்களில் ‘விக்ரம்’ படம் தமிழ்நாட்டிலேயே 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இதேபோல் கேரளாவில் விஜய் படங்களுக்கு அதிகளவில் மவுசு நிலவிவரும் நிலையில், அதனை ‘விக்ரம்’ படம் முறியடித்துள்ளது. அம்மாநிலத்தில் 3 நாட்களிலேயே ‘விக்ரம்’ படம், 15 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. கேரளாவில் மட்டும் 35 முதல் 40 கோடி ரூபாய் வசூல் சாதனை புரியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், வார நாட்களிலும் ‘விக்ரம்’ படத்திற்கு 90 சதவிகித பார்வையாளர்கள் திரையரங்குகளில் குவிவதே இதற்கு காரணம்.

மேலும், மலையாள நடிகர்களான ஃபகத் ஃபாசில், நரேன், செம்பன் வினோத் ஜோஸ் ஆகியோர் நடித்திருப்பதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ள நிலையில், பார்வையாளர்களின் எண்ணிக்கை திரையரங்குகளில் குறையாததால் விரைவில் 300 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் விரைவில் இணைய உள்ளது ‘விக்ரம்’ படம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com