கமல்ஹாசனின் அடுத்த அரசியல் படம் ’தலைவன் இருக்கிறான்!
விஸ்வரூபாம் -2, சபாஸ் நாயுடு படங்களை அடுத்து ’தலைவன் இருக்கிறான்’ படத்தை எழுதி, இயக்கி நடிக்க இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
அவர் அரசியலுக்கு வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தனது அடுத்த படத்திற்கு ‘தலைவன் இருக்கிறான்’ எனத் தலைப்பிட்டுள்ளார். தமிழ், இந்தியில் உருவாக இருக்கும் இந்தப்படத்திற்கு இந்தியில் அமர் ஹைன் எனப்பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனுடன் முக்கியப்பாத்திரத்தில் பாலிவுட் நட்சத்திரம் சைஃப் அலிகான் நடிக்க இருக்கிறார். அமீர் கானுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அரசியல், நிதி மற்றும் நிழல் உலகம் பற்றிய த்ரில்லர் படமாக இது இருக்கும் எனக்கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். கமல்ஹாஸன் ட்விட்டர் மூலம் தமிழக அரசை கேள்வி மேல் கேள்வி கேட்டு வரும் நிலையில் தலைவன் இருக்கிறான் அறிவிப்பு வந்துள்ளது. ஆனால்,‘தற்போது ட்வீட்டி வருவதற்கும், படத்திற்கும் தொடர்பு இல்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்ட தலைப்பு தான் தலைவன் இருக்கிறான்’ என கமல் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம்-2, சபாஸ் நாயுடு படங்களை முடித்துவிட்டு இப்படப்பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட இருக்கிறார்.