நடிகர் கமல்ஹாசனின் புதிய கெட் அப் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
சில நாட்களாக கமல்ஹாசன் தாடியுடன் பொதுமேடைகளில் காட்சி தந்து கொண்டிருந்தார். எப்போதும் க்ளீன் ஷேவிங்கில் தென்படும் அவர் நரைத்த தாடியுடன் வலம் வந்தது அவரது ரசிகர்களுக்கு லேசான சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவரது புதிய தோற்றத்துடன் கூடிய புதிய புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியாகி உள்ளது.
‘இந்தியன் 2’ ஷூட்டிங் விரைவில் ஹைதராபாத்தில் தொடங்க இருக்கும் நிலையில் இந்தத் தோற்றத்திற்கு கமல் மாறியுள்ளார். அதில் விருமாண்டி ஸ்டைலில் அவர் உள்ளார். அதற்கு ட்விட்டரில் ‘மீசையை முறுக்கு’ என்ற ஷேஷ்டேக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘இந்தியன் 2’படத்திற்கான
அறிவிப்பை ஜனவரி 26 அன்று தைவானில் இருந்து ஹைட்ரஜன் பலூனை வானில் செலுத்து உற்சாகமாக அறிவித்தார். அரசியல் அரங்கில் கமல்ஹாசன் ஊழலை எதிர்த்து களமாடி வரும் தருணத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருவதால் அதன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. விரைவில் இந்தப் படக்குழு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார்.