‘இந்தியன்2’ திரைப்படம் நாட்டையே உலுக்கிய மாபெரும் ஊழலை கையில் எடுக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
கமல்ஹாசன் இப்போது அரசியலில் பிசி. அவர் ‘இந்தியன்2’வில் ஏற்கெனவே கமீட் ஆகியுள்ளார். ஆனால் அவர் அரசியல் மேடைகளில் ‘இனிமே சினிமாவில் நடிக்கப் போவதில்லை. நான் சினிமா நட்சத்திரம் இல்லை. உங்கள் வீட்டு விளக்கு’ என்பது போன்ற வசனங்களை பேசி வருகிறார். இதனால் அவரது சினிமா உலகம் இனி வெளிச்சம் பெருமா என பலர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். அதேபோல் அரசியல் வீச்சுக்காக அவர் அப்படி பேசி வருகிறார். மீண்டும் அவர் கமீட் ஆன படங்களை நடித்து தர முன் வருவார் என்கிறார்கள். இதில் அதிகம் குழம்பிப் போய் இருப்பவர் ஷங்கர்தான். அவர் ஜனவரி 26 அன்று தைவானில் ‘இந்தியன்2’விற்கான முறையான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதற்கான கதை தேர்வை கூட முடித்து விட்டதாக தெரிகிறது. நிரவ் மோடி, மல்லய்யா போன்ற பணக்கார முதலைகள் மக்கள் பணத்தை கொள்ளை அடித்துவிட்டு அந்நிய நாட்டுக்குப் போய் மிக சொகுசாக வாழத் தொடங்கியுள்ளனர். அவர்களின் பின்னணியையும் 2ஜி ஊழலையும் கலந்து கதைக் கருவை ஷங்கர் உணவாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. கமலின் அரசியல் கொள்கைக்கும் இந்தக் கதை உறுதுணையாக இருக்கும் என்பதால் இதில் நிச்சயம் கமல் நடிப்பார் என தெரிய வந்துள்ளது. ஆனால் கமல் இனி சினிமா இல்லை என்கிறாரே அதற்கு என்ன அர்த்தம்? அதாங்க.. அரசியல் மேடை ஏறிட்டார் இல்லையா? இனிமேல் எல்லாம் அப்படிதான்.